தூத்துக்குடியில்கஞ்சா விற்ற வாலிபர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் லிங்கராஜ். இவருடைய மகன் பொன்ராஜ் என்ற ராசு (வயது 23). இவர் முருகேசன்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தாராம். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் பொன்ராஜ் என்ற ராசுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பொன்ராஜ் என்ற ராசு மீது ஏற்கனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.