தூத்துக்குடியில் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

தூத்துக்குடியில் தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது

Update: 2022-10-26 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்துஅரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வருகிற 1, 2-ந் தேதிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாற்றுச் சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்க அரசாணைகள், மொழிபெயர்ப்பு கலைச் சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறைஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 2-ந் தேதி மதியம் நடைபெறும் கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு பேசுகிறார். அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கத்தை முழுமையாகநடைமுறைப்படுத்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்