தூத்துக்குடியில்கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-10 18:45 GMT

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கருப்பட்டி ஆபீஸ் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பிரபாகரன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 750 கிராம் கஞ்சா, 2 செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்