தூத்துக்குடியில்டிரைவருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடியில் டிரைவரை கத்தியால் குத்திய இரண்டுபேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-20 18:45 GMT

கோவில்பட்டி வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜ்குமார் (வயது 28). இவர் தூத்துக்குடி தெற்கு பீச்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு பீச் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த தூத்துக்குடி ஜார்ஜ்ரோடு கணேசபுரத்தைச் சேர்ந்த மகேஷ் மகன் திலக் (20), தூத்துக்குடி மரக்குடி தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் மோகித் ஆகியோர் ராஜ்குமாரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து திலக், மோகித் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்