தூத்துக்குடியில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-11 18:45 GMT

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் துரைராஜ் (வயது 48). தொழிலாளி. இவர் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த போது, அங்கு மதுபோதையில் வந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (21), இளங்கோ மகன் கார்த்தீசுவரன் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து துரைராஜிடம் தகராறு செய்து, அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து வெங்கடேஷ் மற்றும் கார்த்தீசுவரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்