தூத்துக்குடியில் மதுவிற்ற 3 பேர் கைது

தூத்துக்குடியில் மதுவிற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுரையின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையர் செல்வநாயகம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன், கோட்ட கலால் அலுவலர் பயாஸ் மற்றும் அலுவலர்கள் நேற்று காலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள மையவாடி பகுதியிலும், தச்சர் தெரு, புதிய பஸ்நிலையம் பகுதியிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 3 பேரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 21 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 

Tags:    

மேலும் செய்திகள்