தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.;

Update:2022-12-06 00:15 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 108 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை தூத்துக்குடியில் 8 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டம் 21, திருச்செந்தூர் 49, காயல்பட்டினம் 35, குலசேகரன்பட்டினம் 108, சாத்தான்குளம் 36, கோவில்பட்டி 4, கயத்தார் 23, கடம்பூர் 55, எட்டயபுரம் 10.2, விளாத்திகுளம் 20, மணியாச்சி 8, கீழஅரசடி1 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

நேற்று காலை முதல் கடுமையான வெயில் மக்களை வாட்டியது. இதனால் ஆங்காங்கே தேங்கிய மழைநீர் காணாமல் போனது.

Tags:    

மேலும் செய்திகள்