திருவாரூரில், கொட்டும் மழையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி திருவாரூரில், கொட்டும் மழையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-01 18:04 GMT

டெல்டா மாவட்டங்களில் புதிய எண்ணெய் கிணறு அமைக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி திருவாரூரில், கொட்டும் மழையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய எண்ணெய் கிணறு அமைக்க கூடாது

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே எண்ணெய் எடுப்பு சுத்திகரிப்பு மட்டும் நடைபெறலாம். மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ, புதிய கிணறுகளை அமைக்கவோ அனுமதிக்க கூடாது. மூடப்பட்ட 40 கிணறுகளை மீண்டும் செயல்படுத்த முயற்சிப்பது சட்டத்துக்கு புறம்பானது.

இந்த செயலை ஆதரிப்போரை கண்டிப்பதுடன், காவிரி டெல்டாவில் எந்த நிறுவனமும் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்

அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் குடைபிடித்தபடி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்