திருச்செந்தூரில்இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-16 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சமையல் எரிவாயு, மின்சாரம், பால் விலை உயர்வை குறைக்க வேண்டும். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். வீட்டு வரி, சொத்து வரி உயர்வை திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். திருச்செந்தூர் தினசரி சந்தை பகுதிக்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் முருகன், சக்திராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லோகநாதன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் கணபதி, ஒன்றிய பொருளாளர் சந்தனம், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் முருகானந்தம், முரளி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சங்கத்தமிழன், காங்கிரஸ் கார்கி, ஜெயந்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுப்பையன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்