திருச்செந்தூர் கோவிலில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று மாலையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று மூலவர் சண்முகர் மற்றும் அனைத்து சுவாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு பா.ஜ.க. மகளிரணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.