இரட்டைத் திருப்பதி கோவிலில்ஆழ்வார் சாத்து முறை நிகழ்ச்சி

இரட்டைத் திருப்பதி கோவிலில் ஆழ்வார் சாத்து முறை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-03-13 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே இரட்டை திருப்பதி கோவிலில் நேற்று ஆழ்வார் சாத்துமுறை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரட்டைதிருப்பதி

நவதிருப்பதி கோவில்களில் 5-வது தலமான இரட்டை திருப்பதி கோவிலில் நேற்று சாத்து முறை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் சுவாமி நம்மாழ்வாருக்கு நேற்று காலை 4 மணிக்கு விஸ்வரூபம், காலை 4.30 மணிக்கு திருமஞ்சனம், 5 மணிக்கு தீபாராதனை, 6 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது. காலை 9.30 மணிக்கு இரட்டை திருப்பதி தேவர்பிரான் கோவிலுக்கு சுவாமி நம்மாழ்வார் வந்தடைந்தார்.

சாத்துமுறை

மதியம் 2.45 மணிக்கு முன் மண்டப குறட்டில் சிறப்பு திருமஞ்சனம். தீபாராதனை. திருவாய்மொழி 100 பாசுரங்கள் சேவித்து சுவாமி தேவர்பிரான், சுவாமி நம்மாழ்வார் இருவருக்கும் சாத்து முறை நடந்தது. சாத்து முறை துளசி தீர்த்தம் சடாரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் பல்லக்கில் ஆழ்வார்திருநகரி புறப்பட்டார். சுவாமி தேவர்பிரான் கோவிலுக்குள் எழுந்தருளினார். இரவு 7.30 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் இருப்பிடம் வந்தார். இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர்சுவாமி, செயல் அதிகாரி அஜித், ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர், சந்தானம் வாசு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்