போடியில்டீக்கடையில் தீ விபத்து

போடியில் டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-03-05 18:45 GMT

போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் முகமது அப்துல்லா. இவர், போடியில் தேனி சாலையில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு இந்த கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த முகமது அப்துல்லா தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்