போடியில்பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
போடியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போடி முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 19). இவர், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது தாயிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அந்த பெண்ணின் தாய் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது தாயை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.