கடையத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கடையத்தில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-05-10 18:45 GMT

கடையம்:

கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், சின்ன தேர்திடலில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா சாகிப், வின்சென்ட் பால், மாரியப்பன், சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளரும், மாநில விவசாய அணி துணைச் செயலாளருமான நல்ல சேதுபதி பங்கேற்று, தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார். அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பேச்சாளர் செங்கை குத்தாலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் வாகைகுளம் பெருமாள், முகமது யாகூப், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், சுந்தரி மாரியப்பன், புஷ்பராணி, ரம்யா ராம்குமார், ஆவுடை கோமதி, பஞ்சாயத்து தலைவர்கள் மலர்மதி சங்கர பாண்டியன், முகைதீன் பீவி அசன், குயிலி லட்சுமணன், பொன்ஷீலா பரமசிவன், ஜன்னத் சதாம் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்