சிவகளையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சிவகளையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

Update: 2023-04-03 18:45 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள சிவகளை கிராமத்தை சுற்றியுள்ள மாங்கொட்டாபுரம், ஆவரங்காடு, பெருங்குளம், பொட்டல், பேட்மாநகரம், பேரூர், பராக்கிரமபாண்டி மற்றும் ஸ்ரீ மூலக்கரை உள்பட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளிடம் தனியார் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை கேட்டு வருவதால், சிவகளையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சிவகளையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நேற்று முதல் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையம் தொடக்க நிகழ்ச்சியில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்