பிளஸ்-2 தேர்வில்கவுணியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்-2 தேர்வில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோவில்பட்டி:
பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
மாணவி ஐஸ்வர்யா மீனாட்சி 600-க்கு 594 மதிப்பெண்ணும், மாணவி ஜோதி 593 மதிப்பெண்ணும், மாணவி தாணுஸ்ரீ 590 மதிப்பெண்ணும் பெற்றனர். மாணவி ஜோதி வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி அமிர்தா தாவரவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், கணினி அறிவியல் பாடத்தில் மாணவி கோகிலா, மாணவர் மனோஜ் குமார் ஆகியோர் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவிகள் ஐஸ்வர்யா மீனாட்சி, கார்த்திகா என்ற செண்பகம் ஆகியோர் வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி ஐஸ்வர்யா மீனாட்சி பொருளியல் பாடபிரிவில் 100-க்கு 100 மதிப்பெண்களும், கார்த்திகா என்ற செண்பகம், பவித்ரா ஆகியோர் கணினி பயன்பாடு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், ஐஸ்வர்யா மீனாட்சி வணிக கணிதம் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தாணுஸ்ரீ உயிரியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் பாலு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.