போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்த 9 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 28 மனுதாரர்கள் ஆக மொத்தம் 37 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து புகார் மனு கொடுத்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.