ஆபத்தான கட்டிடத்தில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகம்

மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் பகுதியில் பராமரிப்பில்லாமல் ஆபத்தான நிலையிலுள்ள கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்படுவதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

Update: 2023-10-20 11:59 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளத்தையடுத்த குமரலிங்கம் பகுதியில் பராமரிப்பில்லாமல் ஆபத்தான நிலையிலுள்ள கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்படுவதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

கிராம நிர்வாக அலுவலகம்

மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் கிழக்கு மற்றும் மேற்கு வருவாய் கிராமங்களுக்கு தனித்தனி கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். இவர்களுக்கான அலுவலகங்கள் குமரலிங்கம் பஸ் நிலையத்துக்கு அருகில் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு செல்வதற்கே பொதுமக்கள் அஞ்சும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

குமரலிங்கம் பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் குமரலிங்கம் மேற்கு மற்றும் கிழக்கு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இது பஸ் நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த அலுவலகங்களுக்கு முன்புறம் பொதுப் பயன்பாட்டுக்கான மேடை அமைக்கப்பட்டது. இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு செல்லும் வழித்தடம் மிகவும் குறுகலாக மாறி விட்டது. சற்று உடல் பருமனான நபர்கள் உள்ளே நுழைந்து செல்ல முடியாது என்று சொல்லுமளவுக்கு குறுகலாக மாறியதுடன், குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் தடுமாறி விழும் சூழல் உள்ளது. குறிப்பாக முதியவர்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

காங்கிரீட் சிலாப்

மேலும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் முன் புறம் உள்ள காங்கிரீட் சிலாப்புகள் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.எனவே இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு வெளிப்புற பார்வை கிடைக்கும் வகையில் திருப்பி புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் வசதியான சூழலை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.



Tags:    

மேலும் செய்திகள்