வடுகப்பட்டியில் குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர்

வடுகப்பட்டியில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.

Update: 2023-05-14 18:45 GMT

பெரியகுளம் கிராம பகுதி, பேரூராட்சி பகுதிகளுக்கு சோத்துப்பாறை மற்றும் வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடுகப்பட்டி பகுதியில் வைகை அணையில் இருந்து கீழவடகரை ஊராட்சிக்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

வடுகப்பட்டி பைபாஸ் சாலை அருகே, கலையரங்கம் செல்லும் நுழைவு பகுதியில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பு இன்னும் சரி செய்யப்படாததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் குடிநீர் கழிவுநீருடன் கலந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதேபோல் வடுகப்பட்டி கடைவீதி அருகே மேல்மங்கலம் ஊராட்சிக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதனை சரி செய்யவில்லை. எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்