பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிறுவன் கைது

நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-12 18:45 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

நாகா்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி வசந்தா (வயது 58). சம்பவத்தன்று வசந்தா தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 7¾ பவுன் நகையை பறித்து தப்ப முயன்றனர். அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவா் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (19) என்பதும் அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த மற்றொரு மர்மநபரை போலீசார் தேடி வந்தனர்.

17 வயது சிறுவன் கைது

இந்தநிலையில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இதுதொடர்பாக அய்யப்பனுடன் சேர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் நெல்லை மாவட்டத்தை சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்