ஸ்ரீவைகுண்டத்தில்தொழிலாளியிடம் கத்தியை காட்டிபணம் கேட்டு மிரட்டல்:வாலிபர் சிக்கினார்

ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்

Update: 2023-08-15 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டத்தில் தொழிலாளியை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வழிப்பறி புகார்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிலர் வழிப்பறி சம்பவங்களில் துணிகரமாக ஈடுபட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு புகார்கள் கூறப்பட்டது. இதைதொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்அந்தோணிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருடர் சிக்கினார்

அப்போது ஸ்ரீவைகுண்டம் கே.டி.கே நகர், கணியான் காலனி அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஸ்ரீவைகுண்டம் நாராயணன் மகன் இசக்கிமுத்து (வயது 20) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு தகராறு செய்ததும், பணம் தரமறுத்த அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்