ஸ்ரீவைகுண்டத்தில்கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு தொடக்கம்
ஸ்ரீவைகுண்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுணடம் தாலுகாவில் 7 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.
இவர்களுக்கான நேர்முக தேர்வு, ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்கார்திக் முன்னிலை வகித்தார். சமூக நல பாதுகாப்பு தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் அன்சி, துணை தாசில்தார் சுடலைவீரபாண்டி, மற்றும் அலுவலர்கள் நேர்முகத்தேர்வை நடத்தினர்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் சைக்கிள் ஓட்டி காட்டினர், ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்களை வாசித்து காட்டி நேர்முகத் தேர்வு நடந்தது. இன்றும்(வியாழக்கிழமை) தேர்வு நடக்கிறது.