சாத்தான்குளத்தில்வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்
சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க அலுவலகத்தை திறக்க கோரி சங்கத் தலைவர் கல்யாண் குமார் தலைமையில் கடந்த 4 நாட்களாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சங்க செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டாலின் பிரபு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாடு பார் கவுன்சில் மூலமாக விரைவில் சங்க அலுவலக சாவி ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.