புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது.

Update: 2023-10-13 01:43 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தையில் நேற்று கால்நடை விற்பனை நடைபெற்றது. இதற்கு 20 எருமை மாடுகள், 150 கலப்பின பசு மாடுகள், 60 கன்றுக்குட்டிகள், 100 ஜெர்சி இன பசு மாடுகள் மற்றும் நாட்டு பசு மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். எருமை மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 அயிரம் வரையும், கலப்பின பசு மாடு ஒன்று ரூ.22 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், ஜெர்சி பசு மாடு ஒன்று ரூ.22 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரையும், நாட்டு பசு மாடு ஒன்று ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. இதேபோல் 400-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் வெள்ளாடு ஒன்று ரூ.7 ஆயிரம் வரையும், வெள்ளாடு ஒன்று ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கும், மாடுகள் மொத்தம் ரூ.80 லட்சத்துக்கும் என கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்