திட்டச்சேரியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திட்டச்சேரியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் போலீசார் கடந்த சில நாட்களாக திட்டச்சேரி பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் திட்டச்சேரி பஸ் நிலையத்தில் ஆட்டோவில் அமர்ந்திருந்த திட்டச்சேரி சாலை தெருவை சேர்ந்த அசன் மகன் முஸ்தபா (வயது32) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தபாவை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.