பொள்ளாச்சியில் வாகனங்களில் ஏர்ஹாரன் சத்தத்தை நவீன கருவி மூலம் கணக்கீடு- வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் ஏர்ஹாரன் சத்தத்தை நவீன கருவி மூலம் கணக்கீடு செய்தனா்.

Update: 2022-07-02 14:31 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் ஏர்ஹாரன் சத்தத்தை நவீன கருவி மூலம் கணக்கீடு செய்தனா்.

நவீன கருவி மூலம் கணக்கீடு

பொள்ளாச்சி பழைய, புதிய பஸ் நிலையங்களில் இருந்து கோவை, திருப்பூர், பழனி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதாக புகார் வந்தது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம், மாசுகட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பஸ்களில் பொருத்தப்பட்டு உள்ள ஏர்ஹாரன் சத்தத்தை நவீன கருவி மூலம் கணக்கீடு செய்யப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி இயக்குனர் செல்வராஜ், சுற்றுச்சூழல் விஞ்ஞானி அருண்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது:-

50 வாகனங்களில் சோதனை

பஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களின் சத்தத்தை துல்லியமாக நவீன கருவி மூலம் கணக்கீடு செய்யப்பட்டது. இதேபோன்று கோவை ரோட்டில் லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

50 வாகனங்களில் ஏர்ஹாரன்களின் சத்தத்தின் அளவு கணக்கீடு செய்யப்பட்டது. இதில் 20 வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஏர்ஹாரன்களில் சத்தம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. அந்த வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்