பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளர் சீரமைப்பு துறையை பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு மாற்றியதை கண்டித்தும், சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் லட்சுமி, தேனி மாவட்ட செயலாளர் மாயாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சீர்மரபினர் நல சங்க தென்மண்டல தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பாண்டீஸ்வரன், மாநில இளைஞரணி செயலாளர் கவியரசன், ஒன்றிய துணைச்செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.