பெரியகுளத்தில்போதை மாத்திரை விற்ற அண்ணன்-தம்பி சிக்கினர்
பெரியகுளத்தில் போதை மாத்திரை விற்ற அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு கடையில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பெரியகுளம் புதிய பஸ் நிலையம் சாலையில் உள்ள ஒரு மருந்து விற்பனை கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளர்களான பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 33), அவரது தம்பி இம்ரான்கான் (28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.