காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகஅமைச்சர்கள் முத்துசாமி, நாசர் தீவிர வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் தீவிர வாக்கு சேகரித்தனா்.;

Update:2023-01-28 03:16 IST

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஈரோடு பி.பி. அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதேபோல் நேற்று மாலை மணல்மேடு பகுதியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, அந்தியூர் செல்வராஜ் எம்.பி., காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு தலைவர் மோகன்குமாரமங்கலம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்