நாசரேத்தில்மீன் வியாபாரி தற்கொலை

நாசரேத்தில் மீன் வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-10 18:45 GMT

நாசரேத்:

திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் சாம்பெனட் (வயது 40). மீன் வியாபாரி. இவர் நாசரேத் ரெயில் நிலையம் எதிரே உள்ள வியாபாரிகள் தெருவில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவரது வியாபாரத்திற்காக முருகன் என்பவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் முருகன் வேலைக்காக சாம்பெனட்டின் வீட்டுக்கு வந்துள்ளார். கதவை திறந்து பார்த்த போது சாம்பெனட் மின்விசிறியில் கயிற்றில் தொங்கியபடி இருந்துள்ளார். இது குறித்து முருகன் நாசரேத் போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாம்பெனட்டின் உடலை மீட்டு, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

சாம் பெனட் தாயார் சுகந்தி கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்