நம்பியூரில்ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்உள்ளிருப்பு போராட்டம்

போராட்டம்

Update: 2023-01-03 20:22 GMT

நம்பியூர் வட்டார தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நம்பியூர் வட்டார தலைவர் அருண் டேனியல் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் போது ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர், வளர்ச்சித்துறை ஊழியர் விரோத போக்கினை கைவிட வேண்டும். இரவு நேர மற்றும் விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தக்கூடாது. பயனாளி சார்ந்த திட்டங்களில் ஊழியர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும், தண்டனைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சுமார் 1 மணிநேரம் இந்த போராட்டம் நடந்தது. இதில் 20 பேர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்