நாலாட்டின்புத்தூரில்கிரிக்கெட் போட்டி

நாலாட்டின்புத்தூரில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி ரெட் கில்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நாலாட்டின்புத்தூர் சன்டே கிளப் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

போட்டிகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கோவில்பட்டி வட்ட அளவில் 20 அணியினர் பங்கேற்று விளையாடினர். போட்டியில் முதலிடத்தை பைரவா மஹால் கிரிக்கெட் கிளப் அணியினரும், 2-வது இடத்தை ரெட் கில்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரும், 3-வது இடத்தை ஸ்பார்டன் அணியினரும், 4-வது இடத்தை இளசை வாரியர்ஸ் அணியினரும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும், பரிசு தொகையும் வழங்கப்பட்டது. விழாவில் ரவி, தே.மு.தி.க. குருவிகுளம் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி ஆயில் மில்ஸ் உரிமையாளர்கள் கோட்டியப்பன், பத்ரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்