கோவில்பட்டியில்ஒர்க் ஷாப்பில் திருடியவர் சிக்கினார்

கோவில்பட்டியில் ஒர்க் ஷாப்பில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-04 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கருணாநிதி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 36). இவர் வேலாயுதபுரம்- சாத்தூர் ரோட்டிலுள்ள பிழைபொறுத்த அய்யனார் கோவில் அருகே ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு அங்கேயே, இரவு காவலர் ஆர்தருடன் சேர்ந்து தூங்கியுள்ளார். அதிகாலை சுமார் 4 மணிக்கு எழுந்தபோது, அங்கிருந்த மோட்டார் கியர் பாக்ஸை ஒருவர் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றுள்ளார். அவரை கணேஷூம், ஆர்தரும் சேர்ந்து பிடித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி நடத்திய விசாரணையில், அவர் கெச்சிலாபுரம் சந்தீப் நகர் ரத்தினம் மகன் முனியசாமி (45) என்பதும், அவர் திருட்டுக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிளும் கடந்த ஜுலை மாதம் 21- ந்தேதி கோவில்பட்டியில் நத்தம் கிராமத்தை சேர்ந்த அய்யலுசாமி நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்து மோட்டார்சைக்கிள், மோட்டார் கியர் பாக்ஸ் ஆகியவற்றை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்