கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில்நிலைய வளாகத்தில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கவரவ தலைவர் ஹரிஹர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் தங்கவேலு வரவேற்றுப் பேசினார். மகளிர் அணி தலைவி பட்டம்மாள் உதயசங்கர், பொருளாளர் முருகையா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானங்களை வலியுறுத்தி பேசினா். கூட்டத்தில்,
பாராளுமன்ற நிலைகுழு 110-வது அறிக்கை பரிந்துரைத்த மத்திய அரசு மருத்துவமனை வசதி அனைத்து நகரங்களிலும் இல்லாததால், மருத்துவப்படியை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு மருத்துவத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஓய்வூதியர்களுக்கு மருத்துவ செலவை அரசு ஈடு செய்ய வேண்டும். .ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் முழு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.