கோவில்பட்டியில்ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

Update: 2023-09-07 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டயில் நேற்று மாலையில் லட்சுமி மில் மேம்பாலம் தண்டவாளம் பகுதியை 55 வயது மதிக்கத்த ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடனடியாக அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதை தொடர்ந்து அவரது உடலை போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்