கோவில்பட்டியில்அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

கோவில்பட்டியில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-02-03 18:45 GMT

கோவில்பட்டி:

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவி சத்யா, ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், நகர துணை செயலாளர் மாதவராஜ், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, வார்டு செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து வெற்றிவேல் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11.01 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா நடந்தது. அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து அண்ணாமலை நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவி, ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்