கொம்புகாரன்பொட்டலில்செல்வ விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
கொம்புகாரன்பொட்டலில் செல்வ விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள கொம்புகாரன் பொட்டலில் செல்வ விநாயகர் கோவில் 4-வது வருசாபிஷேகவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவிளக்கு பூஜை, விநாயகருக்கு விசேஷ பூஜைகளும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சண்முகநாதன், நட்டாத்தி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பண்டாரம் சிறப்பாக செய்திருந்தார்.