கீழ்வேளூரில், காங்கிரசார் ரெயில் மறியல்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கீழ்வேளூரில், காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-24 18:45 GMT

சிக்கல்:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கீழ்வேளூரில், காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி. பதவி தகுதி நீக்கம்

பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி அவதூறு பரப்பிய வழக்கில், அவருக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில் கீழ்வேளூரில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியல்

நேற்று இரவு 8 மணிக்கு திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த சென்ற பயணிகள் ரெயில் கீழ்வேளூருக்கு வந்த போது காங்கிரஸ் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயிலை மறித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக தூக்கி நடைமேடைக்கு கொண்டுசென்றனர்.

12 பேர் கைது

இதை தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 12 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்