கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடக்கம்
கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தொடக்கம்
கயத்தாறு:
கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய 123-வது ஆண்டு தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவில்பட்டி பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், நெல்லை உடையார்பட்டி பங்குத்தந்தை மைக்கேல் ராஜ், கயத்தாறு பங்குத்சந்தை எரிக்ஜோ, உதவி பங்குத்தந்தை அன்புஜோசப் ஜெபக்குமார் மற்றும் திரளாக கிறிஸ்தவர்கள் கொண்டனர். விழாவை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) அன்னை மரியாளின் அர்ப்பணம் மற்றும் ஜெபமாலை, புனித மத்தேயு அன்பியம் நடக்கிறது. தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறும். பத்தாம் திருநாளான செப்.8-ந் தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட்தந்தை ராபின், காலை 6மணிக்கு ஜெயபாலன் ஆகியோின் தேரடி திருப்பலி, ஜெப வழிப்பாட்டுடன் தேரோட்டம் நடைபெறும். மாலை 6 மணிக்கு நற்கருனை, ஆசீர் ஆகிய ஜெபவழிபாட்டுடன் கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறுகிறது.