காயல்பட்டினத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சிதெருமுனை பிரசார கூட்டம்

காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2023-07-21 18:45 GMT

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொது சிவில் சட்டத்தை எதிர்த்து காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு பேரவை மாவட்ட அமைப்பாளர் அ.யாசர் அராபத் தலைமை தாங்கினார். இதில் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் மீனவர் அணி மாநில துணை செயலாளர் மங்கை சேகர், உடன்குடி ஒன்றிய செயலாளர் த.தமிழ்வாணன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்பரிதி, காயல்பட்டினம் புறநகர் பகுதி செயலாளர் கு.அம்பேத், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் முன்னோடி தமிழன், நகர பொருளாளர் ரத்தினபுரி வாசு, பேரவை நகர அமைப்பாளர் இசக்கிமுத்து, நகர பொறுப்பாளர்கள் மாணிக்கராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரவை நகர அமைப்பாளர் நாகூர் மீரான் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்