காயல்பட்டினத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழா

காயல்பட்டினத்தில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்பட்டது.;

Update:2022-10-19 00:15 IST

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் நகர அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் காயல் மௌலானா தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர்கள் பூந்தோட்டம் மனோகரன், ஜீனத் நஜிபா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை அமைப்பாளர் ஓடை கண்ணன், பி.டி.முருகேசன், சங்கரநாராயணன், சேகு முஹம்மது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் டி. பி.எஸ்.சுயம்புலிங்கம் பட்டாசு வெடித்தார்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மு. ராமச்சந்திரன் கலந்துகொண்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கி பேசினார். நகர பொருளாளர் ஜோசப் நன்றி கூறினார்.

இதேபோன்று அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்கவிழா சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகிலும், புதிய பஸ்நிலையம் அருகிலும் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவ பாண்டியன், நகர செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் கட்சி கொடிஏற்றி இனிப்பு வழங்கினா்.

இவ்விழாவில் பேரவை செயலாளர் பாலமேனன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்