காயல்பட்டினம் நகராட்சியில்குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
காயல்பட்டினம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நகராட்சி அரங்கத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு காயல்பட்டினம் நகராட்சி தலைவர் கே.ஏ.எஸ். முத்துமுகம்மது தலைமை தாங்கினார்.
இதில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இந்த பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் நேரடியாக தெரிவிக்கலாம், என நகராட்சி தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு ஆணையாளர் குமார்சிங், துணைத்தலைவர் சுல்தான்லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட குழைந்தைகள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கட்டாய கல்வி, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு மாவட்ட பாதுகாப்பு குழுவை அணுகி அரசு வழிகாட்டுதலுடன் தத்தெடுப்பது, ஆதரவற்ற குழுந்தைகளை கண்டறிந்து, நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறச்செய்தல், போதை பொருள் ஒழிப்பு மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் நபிபுல் புஹாரி மற்றும் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், கலந்துக்கொண்டனர்.