கரூரில், மது பாட்டில்களை பதுக்கி விற்ற 10 பேர் கைது
கரூரில், மது பாட்டில்களை பதுக்கி விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்களை மதுவிலக்கு போலீசார் அவ்வப்போது கைது செய்து வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பத் மா, சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் ஆகியோர் தலைமையிலான போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், வெஞ்சிமாங் கூடலூரை சேர்ந்த முத்துச்சாமி (வயது 60), அரவக்குறிச்சியை சேர்ந்த பாப்பாத்தி (62), கடம்பங்குறிச்சியை சேர்ந்த குமாரசாமி (52), குஜிலியம்பாறையை சேர்ந்த கருப்பசாமி (32), அரவக்குறிச்சியை சேர்ந்த சண்முகம் (41), செம்பியானத்தை சேர்ந்த தங்கதுரை (46), வைகைநல்லூரை சேர்ந்த வெற்றிவேல் (46), உடையாபட்டியை சேர்ந்த மாரியாயி (62), குளித்தலையை சேர்ந்த காமராஜ் (42), கடவூரை சேர்ந்த பழனிச்சாமி (45) ஆகியோர் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 153 மது பாட்டில்கள் மற்றும் மினி வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.