கடமலைக்குண்டு பகுதியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்

கடமலைக்குண்டு பகுதியில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் மீது அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்;

Update:2022-07-21 18:51 IST

ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இந்த பகுதியில் செயல்படும் பெரும்பாலான செங்கல் சூளைகள் முறையான அனுமதியின்றி நடத்தப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். குறிப்பாக சிறப்பாறை பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

மேலும் செங்கல் சூளைகளுக்கு அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் அனுமதியின்றி செம்மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மண் வளம் சுரண்டப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்