இசக்கியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
நடுவக்குறிச்சி இசக்கியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு மாக்காப்பு பூஜை, அலங்கார பூஜை, வில்லிசையும், 2-ஆம் நாள் காலையில் அபிஷேக ஆராதனை, கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து விஷேச புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கனியான் கூத்து, வில்லிசை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.