இலுப்பையூரணி பஞ்சாயத்தில் ரூ.9.30 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடக்கம்

இலுப்பையூரணி பஞ்சாயத்தில் ரூ.9.30 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2022-10-14 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி யூனியன் இலுப்பையூரணி பஞ்சாயத்தில் 15-வது நிதிக்குழு மானியம் ரூ.9.30 லட்சத்தில் சிந்தாமணி நகரில் இருந்து டி.எல்.எஸ். பகுதி வரை வாறுகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, சந்தன மாரியப்பன், பஞ்சாயத்து செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்