தேனியில்வீட்டுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி

தேனியில் வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.;

Update:2023-09-06 00:15 IST

தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இறந்து விட்டார். இதனால் பவுன்ராஜ் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டின் கதை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் அழுகிய நிலையில் அவர் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தம்பி செல்வத்தின் மகன் அஜித்குமார் (28) தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவுன்ராஜிக்கு உடல் நலம் பாதிப்பு இருந்ததாகவும், அவர் முறையாக சிகிச்சை எடுக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்