தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பஸ் நிலையம் அருகில், சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது
தேனி பழைய பஸ் நிலையம் அருகில், சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எரசக்கநாயக்கனூர், டொம்புச்சேரி ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் பணி முடிந்து வீடு திரும்பும் போது பணம் பறிக்கும் நோக்கத்தில் வழிமறித்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.