தேனியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார்

தேனியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்

Update: 2022-07-22 13:34 GMT

தேனி நேருசிலை சிக்னல் அருகில் மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலை ஆகிய பிரதான சாலைகளின் ஓரமும், சாலையோர நடைபாதைகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் நடந்து செல்ல வழியின்றி சாலையில் நடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். நடைபாதை மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் மற்றும் நடைபாதையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகளை அந்தந்த கடைக்காரர்கள் மூலமாக அகற்ற வைத்தனர். இதனால், ஏராளமான விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்துக்கு இடையூறாக பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகள் அகற்றப்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்