தேனியில்அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

தேனியில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.;

Update:2023-01-25 00:15 IST

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் அருகில் தனியார் மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், 'ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி' என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்தும், அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள், ஆய்வு பணிகள் குறித்தும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 10 பேருக்கு ரூ.1 லட்சம் சுழல் நிதியை கலெக்டர் வழங்கினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 2-ந்தேதி வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்